கேப்டன் வெளியிட்ட மதுர வீரன் பா்ஸ்ட் லுக்

10:14 மணி

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும்  மதுர வீரன் படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது.

Loading...

விஜயகாந்த் இளைய மகன் சண்முக  பாண்டியன். சகாப்தம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்தது.. இதையடுத்து நீண்ட  இடைவெளிக்குப்பின் மதுர வீரன் என்ற படத்தில் நடிக்கிறார்.  ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்டு உருவாகும்  இந்த படத்தை  ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இயக்குகிறார்.  V-ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுகம் நாயகி  மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, வேல ராமமூர்த்தி, மைம்கோபி, P.L.தேனப்பன், நான் கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர்  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

இப்படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் இன்று வெளியிட்டார், அவருடன் ​​ பிரேமலதா விஜயகாந்த் உடனிருந்தார்.

(Visited 8 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com