‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் மடோனா செபாஸ்டியன். அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர்,

மீண்டும் விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்து புகழ் பெற்றார். அடுத்து தனுஷ் நடித்திருந்த ‘ப.பாண்டி’ படத்தில் கிராமத்து பெண்ணாக ரசிகர்களை கவர்ந்தார். இப்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் ‘ஜுங்கா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

madonna sebastainசமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மடோனா, ஆபாசமாக நடிக்கக்கூடாது என்பதை கொள்கையாக வைத்துள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது. “முகம் சுழிக்கும் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ஏன்னா எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு. தங்கை இருக்கா.  அவள் கூட இருப்பது தான் என் முதல் பொழுதுபோக்கே. முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுக்காக பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். பர்ஸ்ட் டைம்  சினிமாவுல கட்டிப்பிடிச்சு  நடிச்சப்ப என் அம்மாவுக்கு போன் பண்ணி அழுதேன். மற்றவர்களிடம் பேசவே ரெம்ப பயப்படுவேன். அந்தளவுக்கு எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. காதல் உட்பட என்னுடைய சொந்த விஷயங்களைப் பற்றி பொதுவெளியில் பேச விரும்பம் இல்லை. என் வாழ்க்கையில் அடுத்து என்ன என்று எப்போதுமே யோசித்ததில்லை. இப்போதைக்கு சினிமா பயணம் நல்லபடியாக போய்க்கிட்டு இருக்கு”. என்றார்..