சண்முகப்பாண்டியனின் ‘மதுர வீரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சண்முகப்பாண்டியன் நடிப்பில் ஜி.முத்தையா இயக்கி வரும் ‘மதுர வீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படுவதாக ஏற்கனவே படக்குழுவினர் கூறியிருந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு குறித்த திரைப்படமான இந்த படம் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறும் நாளிலேயே வெளிவரவுள்ளது மிகப்பொருத்தமாக கருதப்படுகிறது.

ஏற்கனவே சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் சீயான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ திரைப்படங்கள் இதே நாளில் வெளிவரவுள்ளதாக கூறப்படினும் இந்த படமும் ரசிகர்களை மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.