திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியும் ஒன்றிணைய வேண்டும் என மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி மரணமடைந்ததையடுத்து அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார். இதனையடுத்து ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அழகிரி ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என அறிவித்தார். தன்னை திமுகவில் சேர்த்துக்கொண்டால் போதும் என்ற ஒற்றை கோரிக்கையை வைத்தார்.

இதையும் படிங்க பாஸ்-  அழகிரியை புகழ்ந்து தள்ளும் எதிர் கோஷ்டி!

ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் கலைஞர் சமாதியை நோக்கி பேரணி நடத்தி கவனத்தை ஈர்த்தார். ஆனாலும் திமுகவில் அவரை சேர்த்தபாடில்லை.

இந்நிலையில் மு.க.அழகிரிக்கு ஆதரவாக மதுரை ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார். கட்சி பலப்பட வேண்டுமென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

இதையும் படிங்க பாஸ்-  எடப்பாடி பழனிசாமியை 6 முறை கைது செய்த திமுக: சட்டசபையில் முதல்வர் தகவல்!

முன்னதாக, கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஸ்டாலினும், கனிமொழியும் திமுகவைச் சிறப்பாக வழி நடத்துவார்கள் என்று மதுரை ஆதீனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.