Pollachi Issue : பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பெயரை செய்தியாளர்களிடம் தெரிவித்த அம்மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் “பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியும் வகையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது தவறு. இந்த நடவடிக்கையால் அப்பெண் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார். எனவே, அப்பெண்ணுக்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.25 லட்சத்தை கொடுக்க வேண்டும். மேலும், விசாரணையே நடத்தாமல் வெறும் 4 வீடியோக்கள் மட்டுமே இருக்கிறது. இதில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை எனக்கூறியதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூறிய மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.