விஜய் தொலைக்காட்சியில் வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் மதுரை முத்து. வித்தியாசமான ஸ்டாண்ட் அப் காமெடிகளை தொடர்ந்து வழங்கியவர் இவர். விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து சன் தொலைக்காட்சியிலும் அசத்தப்போவது யாருவிலும் அசத்தினார்.

ஜித்தன் ரமேஷ் நடித்த மதுரை வீரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் இவர் மனைவி விபத்தில் மறைந்து விட்டார் அதனால் பெண் மருத்துவர் ஒருவரை மணம் செய்து வாழ்ந்து வருகிறார் முத்து.

பல நாடுகளுக்கு சென்று காமெடி ஷோ செய்யும் முத்துவுக்கு அவரின் 13 ஆண்டு கால சேவையை பாராட்டி அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கழை கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

13 ஆண்டுகள் உழைப்புக்கும், களைப்புக்கும் கிடைத்த பட்டம்.. நன்றி நண்பர்களே என்று முகநூலில் முத்து பதிவிட்டு இருந்தார்.

13 ஆண்டுகள் உழைப்புக்கும்,களைப்புக்கும் கிடைத்த "உலக தமிழ் பல்கலைகழகம்" வழங்கிய"டாக்டர்" பட்டம். (மதிப்புறு முனைவர்) நன்றி , உறவுகளே!நண்பர்களே!!!உங்கள் வாழ்த்துக்களும்,ஆசியும் எப்போதும் வேண்டும்.

Muthu Ramasamyさんの投稿 2018年9月2日日曜日