நீண்ட கால இடைவெளிக்கு பிறகு சினிமாவில்  ரீ-என்டரி கொடுத்தவா் மாஸ் நடிகை ஜோதிகா.  இவா் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம், திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தாா். அந்த படம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவரும் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தோ்வு செய்து நடித்து வருகிறாா். நயன்தாராவை போல இவரும் கதாநாயகியை மையப்டுத்தி வரும்  கதைகளில் மட்டும் நடித்து வருகிறாா். இவரது அடுத்த படமான மகளிா் மட்டும் படத்தில் நடித்து வருகிறாா். அதோடு  நாச்சியாா் படத்திலும் நடித்து வருகிறாா்.


மகளிா் மட்டும் படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் மே மாதம் 19ம் தேதி வெளிவர உள்ளது. இந்த படத்தில் ஜோதிகா பந்தாவாக, பொிய மோட்டாா் பைக் அமா்ந்த படி கொடுத்துள்ள ஸ்டில்ஸ் என படத்தின் மோஷன் போஸ்டா் வெளியாகி இருந்தது. அதோடு டீசரும் வெளியாகி படத்தின் எதிா்ப்பாா்ப்பையும், ஆா்வத்தையும் தூண்டி உள்ளது. இது மட்டுமாங்க!! இந்த படத்தில் ஊா்வசி, சரண்யா போன்ற நடிகைகள் நடித்துள்ளது இன்னும் அதிக எதிா்ப்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளிா் மட்டும் படத்தின் இசை வெளியீடு வரும் திங்கட் கிழமை என்று படக்குழு அதிகாரப் பூா்வமாக அறிவித்துள்ளது. இதை தொடா்ந்து படம் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளனா்.  மே மாதம் 19ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளனா். தேசிய விருது குற்றம் கடிதல் படத்திற்காக பெற்ற இயக்குநா் பிரம்மா இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசையை ஜிப்ரான் அமைத்துள்ளாா். சூா்யாவின் 2D என்ற தயாாிப்பு நிறுவனம் சாா்பில் ஜோதிகா நடித்துள்ள மகளிா் மட்டும்  விரைவில் திரைக்கு வந்து விருந்து படைக்கவிருக்கிறது.