சூர்யாவின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

’36 வயதினிலேயே’ படத்திற்கு பின்னர் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சூர்யா சிறப்ப் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ளார்

ஏற்கனவே இந்த படத்தின் சென்சார் உள்பட அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.