செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17

மெர்சல் படத்தில் புதிய வேடத்தில் விஜய் ; காரணம் இவர்தான்

11:54 காலை

Loading...

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியாகவுள்ள படம் மெர்சல்.

இப்படத்தில் மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ளார். இதில், இரண்டு வேடங்களில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், மற்றொரு வித்தியாசமான வேடத்தில் விஜய் நடித்துள்ளார். அதாவது மேஜிக் நிபுணர் வேடத்தில் அவர் நடித்துள்ளார். இதுபோன்ற கதாபாத்திரம் இதுவரை விஜய் செய்ததில்லை.

இந்த வேடத்தில் நடிக்க அவர் உண்மையிலேயே மேஜிக் கற்க வேண்டியிருந்தது. எனவே, மூன்று மேஜிக் நிபுணர்கள் அவருக்கு பயிற்சி அளித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும், பிரபல மேஜிக் நிபுணரான ‘கோகோ ரெக்யூம்’ விஜய்க்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளார். இவரின் மேஜிக் திறமைக்கு வெளிநாடுகளில் பல ஆயிரம் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெக்யூம் தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகர் விஜயோடு இணைந்து பணிபுரிந்ததில் எனக்கு பெருமையாக உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 24 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com