ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களுக்கு பிரம்படி தரப்பட்டது மலேசிய பிரதமர் வரை சென்று சர்ச்சையாகியுள்ளது.

அவர்கள் மீதான வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவர்கள் குற்றவாளிகள் என கண்டு தலா 3,300 ரிங்கிட் (சுமார் ரூ.57 ஆயிரம்) அபராதம் செலுத்தவேண்டும் என்றும், அவர்களுக்கு தலா 6 பிரம்படியும் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.

அதைத் தொடர்ந்து அந்த கோர்ட்டில் வைத்து சுமார் 100 பேர் முன்னிலையில் அந்தப் பெண்களுக்கு பிரம்படி தரப்பட்டது. இதற்கு எதிராக அங்கு கருத்துக்கள் எழுந்தன.

அந்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுத்ததற்கு பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ‘‘இந்த தண்டனை தொடர்பாக நான் மந்திரிகளிடம் விவாதித்தேன். அவர்கள் இந்த தண்டனை, இஸ்லாமிய மதம் கூறுகிற நீதியையும், சகிப்புத்தன்மையையும் பிரதிபலிக்கவில்லை என்று கருதுகின்றனர். இந்த தண்டனை இஸ்லாமிய மதம் பற்றிய ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். என கூறி உள்ளார்.