முதலமைச்சரின் மனைவி ரஜினியை திடீரென சந்திக்க காரணம் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் ஒருசில மாதங்களில் புதிய அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை அரசியல் கட்சி தலைவர்கள் நேரிலும் தொலைபேசியிலும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் பிறந்த சொந்த மாநிலமான மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் நேற்று ரஜினியை அவர் தங்கியிருக்கும் இடத்தில் நேரில் சந்தித்து பேசினார். அம்ருதா முதலமைச்சரின் மனைவி மட்டுமின்றி ஒரு பாடகி ,சமுக சேவகி மற்று முன்னாள் வங்கி ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது

சமூக பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்து ரஜினியை சந்தித்து பேசியதாகவும் இந்த சந்திப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் அம்ருதா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.