Home சற்றுமுன் யாஷிகாக்குகே பிரச்னை இல்ல…? மஹத் இப்படித்தான்! காதலி பகீர் பதில்

யாஷிகாக்குகே பிரச்னை இல்ல…? மஹத் இப்படித்தான்! காதலி பகீர் பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் மன்னன் போல் வலம் வருபவர் மஹத். அவரது நகைச்சுவையை உள்ளே இருப்பவர்களும், வெளியே பார்ப்போரும் வெகுவாக ரசிக்கிறார்கள்.

இதற்கிடையே கவர்ச்சி கன்னியாக படங்களில் கிறங்கடித்த யாஷிகா மஹத்துடன் சேர்த்து ஜாலியாக பல விஷயங்களை செய்து வருகிறார். இருவரும் காதலக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் மஹத்தின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவரது காதலி பிராசி லைவ்வாக ரசிகர்களிடம் பேசியுள்ளார்.

அதில் யாஷிகா-மஹத் செய்வது குறித்து ரசிகர்கள் கேட்டபோது, அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள், யாஷிகா மஹத் செய்வது தவறு என்று கூறினால் தான் பிரச்சனை, அவர் எதுவும் கூறவில்லையே என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் மஹத் இப்படி தான் இருப்பார், காமெடியாக தான் பேசுவார் என்று நறுக்கென பேசியுள்ளார்.