இவரை மகேந்திரன் என்று சொல்வதை விட மாஸ்டர் மகேந்திரன் என்று சொன்னால்தான் பலருக்கும் தெரிகிறது.

அப்பொழுதே நாட்டாமை உள்ளிட்ட படங்களில் பஞ்சாயத்து சீனில் சிறுவயது குழந்தையாக நடித்து கலக்கி இருப்பார்,

பாண்டியராஜனுடன் கும்பகோணம் கோபாலு, தாய்க்குலமே தாய்க்குலமே உள்ளிட்ட படங்களில் குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இப்படி சிறுவயதில் இருந்தே மக்கள் மனதில் இவர் இருந்தாலும் வாலிபர் ஆன பிறகு இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை .

அந்த வருத்தம் அவருக்கும் உண்டு அவரை சிறுவயதில் இருந்து பார்ப்பவர்களுக்கும் உண்டு.

இந்த நிலையில் இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் என்ற திரைப்படத்தில் மகேந்திரன் நடிக்கிறார்.

திவ்யா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார். ஆர். சிவா இயக்குகிறார். இந்த படமாவது மகேந்திரன் திரையுலக வாழ்வின் திருப்புமுனையாக அமையட்டும்.