இயக்குனர் முருகதாஸ் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் மகேஷ்பாவுவிற்கு ஜோடியாக, தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ள ராகுல் ப்ரீத்திசிங் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை புறநகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தலைப்பை தேர்ந்தெடுக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வந்தார் முருகதாஸ்.

இந்நிலையில், இந்த படத்திற்கு ‘சம்பவாமி யுஹே’ என அவர் பெயரிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு பதிப்பிற்கும் சேர்த்து முருகதாஸ் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், இந்த தலைப்பு மகேஷ்பாபுவிற்கு பிடிக்கவில்லையாம். தலைப்பை மாற்றச் சொல்லி முருகதாஸிடம் வற்புறுத்தி வருகிறாராம். எனவே, அவருக்கு பிடித்தது போல் ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்கும் வேலையில் அப்படக்குழுவினர் மூழ்கியுள்ளனர். ஆனாலும், சம்பவாமி யுஹே என்ற தலைப்பிற்கே முருகதாஸ் முன்னுரிமை தருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.