முதல்நாளிலேயே இத்தனை கோடியா? : ‘ஸ்பைடர்’ படத்தை பாராட்டிய ரஜினி

09:45 காலை

 

Loading...

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தபோதிலும், தொடர் விடுமுறை காரணமாக படத்திற்கு நல்ல வசூல் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முதல் நாளில் மட்டும் உலக அளவில் ரூ.51 கோடி வசூலித்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

மேலும், ஸ்பைடர் படம் ரஜினிகாந்துக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ரஜினி, மகேஷ் பாபு மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். மகேஷ்பாபுவின் நடிப்பும், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கமும் நன்றாக வந்திருப்பதாக அவர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால், ஸ்பைடர் படக்குழுவினர் மேலும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

(Visited 20 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com