Kamalhaasan election compaign – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யக்கூடாது என அக்கட்சியை சேர்ந்த உறுப்பினரின் மனைவியே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளிலும் வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து கட்சிகளும் அந்த தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனும் அந்த தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், சூலூரில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர் பாலமுருகன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆனால், இது தொடர்பாக கமல்ஹாசன் எந்த இரங்கல் செய்தியும் வெளியிடவில்லை. எனவே, இதில் அதிருப்தி அடைந்த பாலமுருகனின் மனைவி, சூலூர் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யக்கூடாது என அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் அந்த கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.