ரஜினி கட்சியில் குவியும் நடிகர்கள்: ஆட்சியை பிடித்துவிடுவாரோ?

கடந்த சில மாதங்களாகவே தமிழகம் ஒரு வலிமையான தலைவர் இல்லாமல் தத்தளித்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு பலரை முகம் மலர செய்துள்ளது. இந்த முறை பூச்சாண்டி காண்பிக்காமல் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டதாம். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கட்சியின் பெயரையும் கொடியையும் ரஜினி அறிவிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ரஜினியின் கட்சிக்கு ஆதரவு குவிந்து வருவதாக கூறப்படுகிறது. ரஜினியின் நாயகி மீனா, கவர்ச்சி நடிகை நமீதா, அதிமுக பேச்சாளர் விந்தியா உள்பட பல நடிகர்கள், நடிகைகள் ரஜினியின் கட்சியில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கமல்ஹாசனும் தனது தார்மீக ஆதரவை தனது நண்பருக்கு தெரிவிப்பார் என்ற வதந்தியும் உலாவி வருகிறது.

அதுமட்டுமின்றி திமுக, அதிமுகவின் இரு அணிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களும் ரஜினியின் கட்சியில் இணையவுள்ளதாகவும், அவர்கள் இப்போதே ரஜினிக்கு தங்கள் ஆதரவை தொலைபேசியில் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. போற போக்கை பார்த்தால் ரஜினி ஆட்சியை பிடித்து விடுவாரோ? என்று தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்கள் கூறி வருகின்றனர்.