தேனியில் காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தேசியக் கொடியை வைத்து கார்ட்டூன் வரைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதிபாசு. 40 வயதாகும் இவர் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் போடி நகர பொறுப்பாளராக உள்ளார். சமீபத்தில் மத்திய அரசு ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்தது மற்றும் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது சம்மந்தமாக மோடிக்கு எதிராகக் கார்ட்டூன் ஒன்றை வரைந்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தார்.

அதில் மோடி டாய்லட்டில் அமர்ந்திருப்பதாகவும் தேசியக்கொடியை டிஸ்யு பேப்பராகவும் உபயோகிப்பது போல அமைக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்த போடி நகர பாஜக பிரமுகர் தண்டபாணி போலிஸில் புகார் அளித்ததை அடுத்து ஜோதிபாசு கைது செய்யப்பட்டுள்ளார்.