செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 12

படமாகிறது மலலாவின் வாழ்க்கை சரிதை!

08:37 காலை

Loading...

குத்துச்சண்டை வீரர் மேரி கோம், கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரின் வாழ்க்கை சரிதையாக 2014 மற்றும் 2016 இல் வெளிவந்த திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் வெற்றிப்பெற்றதை அடுத்து சுயசரிதைச் சார்ந்தப் படங்களின் மீது திரையுலக கவனம் திரும்பியுள்ளது.

தனது சொந்த நாட்டில் தீவிரவாத கொலை தாக்குதல் உட்பட பல எதிர்ப்புகளை மீறி, பெண் கல்விக்காகவும் உலக சாமாதானத்திற்காகவும் இன்றுவரை விழிப்புணர்வை ஏற்படுத்தி, பலரின் ஆச்சரிய பார்வைக்குச் சொந்தக்காரர்பாகிஸ்தானைச் சேர்ந்த 20 வயது இளம் சமூக ஆர்வலர், மலலா யூசுப்சாய்.

இவரின் வாழக்கை சரிதைதான் பாலிவுட்டில் தயாராகி வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடுப்பு புஜ் மற்றும் மும்பையில் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதன் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு வரும் செப்டெம்பர் மாதம் தொடங்கும் என்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் குமார் சமீபத்தில் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி இவர் கூறுகையில், “இந்த சுயசரிதை படம் 50%  முடிந்துவிட்டது, இந்தப் படத்தை விரைவில் வெளியிட ஆர்வமாக உள்ளேன். போர் நிகழ்வுகள் மற்றும் சில முக்கியமான காட்சிகளை ஏற்கனவே படமாக்கி விட்டோம். இப்போது காஷ்மீரில் ‘மலலா’ வைப் படமெடுக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார். மிகுந்தப் பாதுகாப்புகளுக்கு இடையில் இப்படம் தயாராகி வருகிறது. இருப்பினும் இதில் மலலாவாக நடிக்கவிருப்பவரின் அடையாளம் ரகசியமாகவே இதுவரை வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி இவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்தப் படம் பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காகக் குரல் கொடுத்த போது,மலலா யூசுப்சாய் அனுபவித்த தனித்துவமான நிகழ்ச்சிகள் மற்றும்தீவிர சூழ்நிலைகளின் உண்மைகளை வெளிப்படையாகக் காட்டவுள்ளதாகும் கூறப்படுகிறது.

(Visited 16 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com