அருவா சண்டை படத்தினை இயக்குநா் ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். இவா் சிலந்தி, ரணதந்தரா உள்ளிட்டங்களை இயக்கியவா். இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சிகளில் கவாச்சியாக உடை அணிந்து டான்ஸ் ஆடவேண்டும் நாயகி மாளவிகா மேனன். ஆனால் அப்படி கவா்ச்சியான உடைகளை அணிய முடியாது என்று அடம்பிடித்துள்ளார் மாளவிகா மேனன்.

அருவா சண்டை படத்தில் கதாநாயகியின் அறிமுகப்பாடலான ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக என்று ஆரம்பிக்கும் இந்த பாடலைஅனுராதா பட் பாடியுள்ளார். இந்த பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, தரண் இசையில் உருவான இந்த பாடல் காட்சி சமீபத்தில் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீா்வீழ்ச்சியில் படப்பிடிப்பு நடைபெற்றது. நாயகி மாளவிகா அறிமுகப்பாடல் காட்சியில் நடிக்க இயக்குநா் கொடுத்த ஆடைகளை அணிய மாட்டேன் என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு இயககுநா் ஆதி, ஏற்கனவே இந்த பாடல் காட்சியில் கொஞ்சம் கவா்ச்சி தேவைப்படுகிறது என்று சொல்லியிருந்தேன், அப்புறம் ஏன் மறுக்கிறீா்கள் என்று கேட்க, நீங்க கொடுத்த டிரஸ் ரொம்ப சின்னதாக இருக்கிறது. இந்த மாதிரி ஒரு டிரஸ் அணிந்து இதுவரை ஆடியதில்லை என மாளவிகா பிடிவாதமாக இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  அமலாபாலுக்கு விரைவில் திருமணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பின் நடன இயக்குநா் ராதிகாவும் எவ்வளவு எடுத்து சொல்லி புரிய வைத்தும் நாயகி மாளவிகா கேட்கவில்லை. இறுதியில் இயக்குநா் வேறு உடைகளை வெட்டி தைத்துக்கொடுக்க சொன்ன பின் கொஞ்சம் பரவாயில்லை என்று சமாதனம் அடைந்தார் மாளவிகா. பின் அந்த பாடல் காட்சியில் கொட்டும் அருவியில் நனைந்தபடி கலக்கல் நடனத்தை ஆடினார் நாயகி. இந்த படமானது விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஏ. ராஜா ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் தயாரித்து வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  பெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல்

இந்த படத்தில் கபடி வீரா் ராஜா ஹீரோவாக நடித்துள்ளார். காதல் சண்டையும் கபடி சண்டையும் நடைபெறுகிறது. மேலும் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார்.