காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, இனிமேல் தான் மகள் வயது பெண்களுடன் டூயட் பாடப் போவது இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ரஜினியின் மகள்கள் வயதை விட மிகவும் குறைவான மாளவிகா மோகனன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது ரஜினியை வைத்து படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்தது. ஏற்கனவே இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை சிம்ரன் ஒப்பந்தமானார். இந்நிலையில் மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனனை ரஜினிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

முன்னதாக ரஜினி படத்தில் பிரபல நடிகை த்ரிஷா இருப்பதாகவும் கூறப்பட்டது. மாளவிகா ரஜினிக்கு ஜோடியென்றால் த்ரிஷாவுக்கு என்ன கதாப்பாத்திரம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் காலா இசை வெளியீட்டு விழாவில் மகள்களை விட வயதில் மிகவும் சிறிய பெண்களுடன் டூயட் ஆடப்போவது இல்லை என ரஜினி கூறியது என்னவாயிற்று என்ற கேள்வியும் எழுந்துள்ளது.