இளையதளபதி விஜய் தனது குடும்பத்துடன் லண்டன் மற்றும் சீன சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அவரால் மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது.

ஆனால் மலேசியாவுக்கு சென்றவர்களுக்கு கூட கிடைக்காத மெர்சலான பரிசு விஜய்க்கு கிடைத்துள்ளது. மலேசியாவில் உள்ள விஜய் ரசிகை ஒருவர், ‘மெர்சல்’ படத்தில் விஜய் நடித்த தளபதி கேரக்டரின் உருவத்தை பென்சிலால் மிக அற்புதமாக வரைந்து அதை பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாணிடம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ஆளப்போறான் தமிழனை முந்துமா விஜய்யின் அறிமுக பாடல்

மேலும் இந்த ஓவியத்தை மறக்காமல் விஜய் அண்ணாவிடம் கொடுத்துவிடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவலை ஹரிஷ் கல்யாண் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மிக விரைவில் அந்த ரசிகையின் பரிசை ஹரிஷ், விஜய்யிடம் கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.