காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் 40 இடங்களுக்கு மேல் வென்று விட்டால் மோடி தூக்கில் தொங்க தயாரா என மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 6 கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் மே 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி. பிரச்சாரத்தின் போது  ‘காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு சென்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஆனால் இம்முறை அதைவிட கம்மியாக 40 தொகுதிகளில்கூட வெல்லாது’ எனக் கூறிவருகிறார்.

இதனால் கோபமடைந்த காங்கிரஸின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே ‘மோடி எங்கு சென்றாலும் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது எனப் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்படி காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளுக்கு மேல் வென்றால் மோடி தூக்கில் தொங்குவாரா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

மல்லிகார்ஜுனாவின் இந்த பேச்சு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஒரு மூத்த அரசியல்வாதியிடம் இருந்து இதுபோன்ற கீழ்த்தரமான வார்த்தைகள் வருவது அரசியல் நாகரிகம் இல்லை எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.