கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் பிரபல நடிகை மல்லிகா ஷெராவத். இவர் பாரீஸ் நகரில் பிரெஞ்ச் கணவருடன் குடியிருக்க வாடகைக்கு எடுத்த வீட்டிற்கு சுமார் ரூ.,60 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்திருந்தார்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் உடனடியாக பாக்கி வாடகையை செலுத்திவிட்டு வீட்டைவிட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் வாடகை பாக்கியை செலுத்தவில்லை என்றால் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.