Categories: Uncategorized

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தில் குக்கூ’ படப் புகழ் மாளவிகா நாயர்

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் கதாநாயகியாக   ‘குக்கூ’ படப் புகழ் மாளவிகா நாயர்  தேர்வு

‘குக்கூ’ படம் மூலம்  ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவர்ந்து சென்றவர் மாளவிகா நாயர். தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் இருக்கும்  இவர், தற்போது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விநியோக துறையில் நிலையான வெற்றியை தழுவி வரும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் (குறும்பட மற்றும் விளம்பர பட இயக்குநர்) இயக்குகின்றார். ‘ராஜதந்திரம்’ புகழ் வீரா கதாநாயகனாக நடிக்கும்  இந்த அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படத்தில் மேட்லி ப்ளூஸ் இசையமைப்பாளராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

“நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகை தான் எங்கள் படத்தின் கதைக்கு ஏற்றவராக இருக்க முடியும். அந்த வகையில் எங்கள் அனைவரின் மனதிலும் தோன்றிய ஒரு பெயர் – மாளவிகா நாயர்.  ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே, மாளவிகா இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார். ‘குக்கூ’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் இந்த படத்தில் நடிக்கின்றார். எங்கள் படத்தின் படப்பிடிப்பை கடந்த   27.03.2017 அன்று  நாங்கள் புதுச்சேரியில் துவங்கி இருக்கின்றோம். தற்போது தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த படப்பிடிப்பில் எங்களோடு   இணைந்து  பணியாற்றும் மாளவிகா நாயர்,  வருகின்ற   ஏப்ரல் மாதத்தில் மீண்டும் எங்கள் படப்பிடிப்பில் இணைய இருக்கின்றார்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன்

Recent Posts

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிகவும் ரசிக்கப்படுவது சூப்பர் சிங்க நிகழ்ச்சி. தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலுமே இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்       பு உண்டு.… Read More

57 mins ago

அதிகாலை 2 மணி வரை கடைகளைத் திறக்கலாம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

மதுரையில் கடைகளை அதிகாலை இரண்டு மணி வரைத் திறக்கலாம் என் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிப்பண்டிகை ஞாயிற்றுக் கிழமை வந்துள்ளது. இதனால்… Read More

2 hours ago

சிதறிக்கிடந்த ரத்தம்….சிறுமி மரணம்.. தூக்கில் தொங்கிய தாய்.. கோவையில் அதிர்ச்சி

கோவையில் 5 வயது சிறுமியும், அவரின் தாயும் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீகாமாட்சி நகரில் வசித்து வருபவர் வேதவள்ளி (41).… Read More

2 hours ago

இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் – வொயிட்வாஷ் முனைப்பில் இந்தியா !

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்குகிறது. இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டி 20,… Read More

2 hours ago

மருமகனின் அண்ணனைத் திருமணம் செய்துகொண்ட மாமியார் – பாதுகாப்புக் கோரி போலிஸில் தஞ்சம் !

பஞ்சாப்பில் மருமகனின் அண்ணன் மீது காதல் கொண்ட பெண் ஒருவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரை சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த… Read More

2 hours ago

திருமணம் ஆன பெண்ணை கணவரோடு சேர்ந்து வாழ  விடாத நபர் – தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அட்டூழியம் !

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் பெண்களை மயக்கி ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் தொரயன்மலைப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர்… Read More

3 hours ago