ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன். 100கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இந்த படத்தின் வெற்றிக்கு அரவிந்த சாமிக்கு முக்கிய பங்கு உண்டு. காரணம் அவரது வில்லத்தனமான நடிப்புக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பை கொடுத்தனர்.

இந்த நிலையில் தனி ஒருவன் 2 தயரிக்கும் பணியில் ராஜா ஈடுபட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பையும் அவர் சமீபத்தில் வெளிட்யிட்டார். இந்த படத்திலும் அரவிந்த் சாமியே வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நடிக்கவில்லை என்றே தெரிகிற்ச்து.அவருக்கு பதில் மம்முட்டியுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இன்னும் தனது முடிவை கூறவில்லை என்றும் தெரிகிறது.