குரு என் ஆளு,தடையறத் தாக்க ஆகிய பாடங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ் 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். ஊமை விழிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க திரும்பி உள்ளார்.

2006ஆம் ஆண்டு கரு.பழனியப்பன் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவா் மம்மதா மோகன்தாஸ். பின் குரு என் ஆளு, தடையறத்தாக்க உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் சொல்லும்படியாக படங்கள் அமையாத காரணத்தால் மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வந்தார்.

எண்பதுகளில் வெளிவந்த ஊமைவிழிகள் முழுக்க பிலிம் இன்ஸ்டியூட் மாணவா்கள் சோ்ந்து உருவாக்கப்பட்ட படம் இது. விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த த்ரில்லா் படம். தற்போது அதே தலைப்பில் புதிய படமொன்றை அறிமுக இயக்குநா் ஆகாஷ் சாம் இயக்கத்தில் உருவாகும் இதில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக தான் மம்தா மோகன்தாஸ் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மம்தா மோகன்தாஸ் இதுபற்றி கூறியதாவது, 7ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். புதுமுக இயக்குநா் மற்றும் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா உடன் சேர்ந்து நடிப்பது மிகுந்த சந்தோசம் என்று தெரிவித்துள்ளார்.

ஊமைவிழிகள் படமானது பழைய படத்தின் ரீமேக் அல்லது தொடர்ச்சியோ கிடையாது. முழுக்க முழுக்க புது படமாக உருவாக உள்ளது. பழைய ஊமை விழிகள் படத்தில் அருண்பாண்டியன், சந்திரசேகா், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா, சரிதா என ஒருநட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதில் நடிக்கும் நாயகி மம்தா மோகன்தாஸ் ரா.பாத்திபன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் உள்ளே வெளிளே 2 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.