தேனி அருகே திருமண ஆசை காட்டி மைனர் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி அருகே கோம்பை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரின் மகன் விக்னேஸ்வரன் (23). இவர் அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு கேரளாவில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. எனவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்ந்து வந்ததாக தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி அளித்த விக்னேஷ், அருகிலிருந்த ஓடைப்பகுதிக்கு அந்த சிறுமியை அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். இது அப்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வர இதுபற்றி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. எனவே, விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.