டெல்லியில் பெண் ஒருவருக்கு திருமணமாகி நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவரை திருமணம் செய்ய ஒருவர் அவரது மகனை கடத்திய சம்பவம் நடந்துள்ளது.

டெல்லி மதுவிஹார் பகுதியில் வசித்து வருகிறார் பெண் ஒருவர். இவரது நான்கு வயது மகனை கடந்த 16-ஆம் தேதி காணவில்லை. இதனால் தனது குழந்தையை சிவக்குமார் என்பவர் தான் கடத்தியிருக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த பெண்.

இதனையடுத்து சிவக்குமாருக்கு தெரியாமல் அவனை பிந்தொடர்ந்து கவனித்து வந்த போலீசார் சிறுவனை அவன் தான் கடத்தினான் என்பதை உறுதி செய்தனர். பின்னர் சிவக்குமாரை கைது செய்து சிறுவனை மீட்டனர்.

பின்னர் சிவக்குமாரிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறுவனின் தாயை தான் திருமணம் செய்ய விரும்பியதாகவும், ஆனால் அதனை அந்த பெண் பலமுறை நிராகரித்துவிட்டார். எனவே அவரது குழந்தையை கடத்தி மிரட்டி கட்டாய திருமணம் செய்ய முயற்சித்ததாக சிவக்குமார் கூறியுள்ளார்.