அரசியல்
தீராத சாதி தீண்டாமை… கொட்டும் மழையில் பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த அவலம்

Man body buried in raining by petrol – மதுரை அருகே மரணமடைந்த பட்டியலினத்தவர் ஒருவரின் உடலை பொது மயானத்தில் எரிக்க மறுப்பு தெரிவித்ததால் அவரது உடல் கொட்டும் மழையில் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா பேரையூர் அருகேயுள்ள சுப்புலாபுரம் பகுதியில் 50கும் மேற்பட்ட பட்டியலின மக்கள வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் அவரின் உடலை பொது மயானத்தில் தகனம் செய்ய மாற்று சாதியினர் தடை விதித்து வருகின்றனர். எனவே, மாயானத்திற்கு எதிரே உள்ள வெட்டவெளியில் உடலை புதைத்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரமும் ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார். அவரது உடலையும் மாயானத்தில் தகனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் கொட்டும் மழையில் அவரின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே, மரணமடைந்த ஒரு பட்டியலினத்தவரின் உடலை எடுத்த செல்ல அனுமதி மறுத்ததால் அவரது உடலை பாலத்தின் கீழே கயிறு கட்டி இறக்கிய புகைப்படம் வெளியான நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
செய்திகள்3 days ago
இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….
-
உலக செய்திகள்1 day ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்5 days ago
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
-
செய்திகள்4 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…