மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவன் தூக்கில் தொங்கிய காரணம் சென்னை மாதவரம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் பால்பண்னை பகுதியில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் சவுந்தர்யா என்கிற பெண்ணை ஒருவருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த நிலையில் சௌந்தர்யா கர்ப்பமானார்.

இதில் மகிழ்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் மனைவியை உள்ளம் கையில் வைத்து பார்த்துக்கொண்டார். சமீபத்தில் ஊர் மெச்சும் படி தடபுடலாக வளைகாப்பு நடத்தினார். அதற்காக நண்பர்களிடம் அவர் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில், கடன் வாங்கி ஏன் வளைகாப்பு நடத்தினீர்கள்? என பாலகிருஷ்ணனிடம் சௌந்தர்யா சண்டை போட்டுள்ளார். இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அவரின் குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.