இணையத்தில் பெண் போல் கணக்கு தொடங்கி ஆண்களிடம் ஆபாச புகைப்படங்களை பெற்று பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துமகுரு மாவட்டம் சிராவை சேர்ந்தவர் வினய்(32). இவர் ஒரு இறைச்சி கடையை நடத்தி வருகிறார். இவர் டேட்டிங் என்கிற இணையத்தில் பெண் போல் போலி கணக்கு தொடங்கியுள்ளார். அதில் ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தை வைத்துள்ளார். இதைப் பார்த்த பல ஆண்களும் அவருடன் உரையாடி வந்துள்ளனர்.

அதில் சிலரின் ஆபாச புகைப்படங்களை அனுப்புமாறு வினய் கேட்க, பெண் என நினைத்து அவர்களும் வாங்கியுள்ளனர். அதன் பின் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய வினய், பணம் கொடுக்கவில்லை எனில் உங்களின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதில் ஒருவர் பெங்களூர் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வினய் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் விசாரணையில் தனது கடனை தீர்க்க இந்த முயற்சியில் வினய் இறங்கியது தெரியவந்துள்ளது.