Hyderabad girl murder – காணாமல் போன இளம்பெண் கொலை செய்யப்பட்டது சூட்கேஸில் அவரின் உடல் மீட்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் மெட்சால் என்கிற பகுதியில் சாலைபகுதியில் கிடந்த சூட்கேஸை பார்த்த பொதுமக்கள் நேற்று போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து சோதனை செய்த போது, ஒரு இளம்பெண்ணிண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அந்த சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்தது. எனவே, காணாமல் போன பெண்களின் விபரங்களை போலீசார் சேகரித்தனர்.

அதில், கொலை செய்யப்பட்ட பெண் ராமசந்திரபுரத்தை சேர்ந்த லாவண்யா(25) என்பதும், அவரை காணவில்லை என அவரின் பெற்றோர் கடந்த 7ம் தேதியே போலீசாரிடம் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது. விமான நிலையத்தில் தனது ஆண் நண்பர் சுனிலை வழியனுப்ப சென்ற அவர் வீடு திரும்பவே இல்லை என்பது தெரியவந்தது.

 

இதுபற்றி போலீசாரின் விசராணை செய்த போது திடுக்கிடும் செய்திகள் தெரியவந்துள்ளது.

2017ம் ஆண்டு முதல் சுனிலும், லாவண்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், மஸ்கட்டில் வேலை கிடைத்த பின், லாவண்யாவை விட்டு பிரிவது என சுனில் முடிவு செய்துள்ளார். இதை லாவண்யா ஏற்கவில்லை. காதலை முறித்துக்கொண்டால், என்னை நீ பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என லாவண்யா மிரட்டியுள்ளார்.

இதில் கோபமடைந்த சுனில் அவரை கொலை செய்வது என முடிவெடுத்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ஹைதராபாத் விமான நிலையத்தின் அருகே லாவண்யாவை வரவழைத்த சுனில் அங்கே அவரை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீசியுள்ளார்.

சுனிலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், லாவண்யாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.