ஆந்திராவில் நடுரோட்டில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஒரு மர்ம மனிதர் இன்னொருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் சோடவரம் பகுதியில் பரபரப்பான சாலை நட்ட நடுப்பகலில் சில தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிண்டு வந்த நபர் ஒருவர் சாலையில் போதையில் கிடந்த நபர் ஒருவரைக் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் அந்த நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில் அந்த நபரின் பெயர் ராஜேஷ் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக்காட்சிகள் ஒயின் ஷாப்பில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாக வண்டியின் நம்பரை வைத்து கொலைசெய்த சாத்தி பாபு நபரைக் கைது செய்தனர். விசாரணையில் சாத்திபாபுவின் மனைவிக்கும் கொலை செய்யப்பட்டவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அதற்காகவே கொலை செய்ததாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதிகரித்து வரும் கள்ளக்காதலால் கொலை போன்ற குற்றங்கள் அதிகரித்து குடும்ப வாழ்க்கை சீரழிந்து வருவது கவலை அளிக்கிறது.