ஒரிசாவை சேர்ந்த திலக் என்பவர் உணவு வகைகளை தயார் செய்து அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்து வந்தார். சமீபத்தில் திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார் இவர்.

திலக் தனது மனைவி திவ்யா உடன் குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்தார். திலக் உணவு வகைகளை அருகில் உள்ள கிராமங்களுக்கு விற்பனை செய்ய சென்றதில் ராஜா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இந்த அறிமுகத்தால் ராஜா, திலக்கின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்.

இந்நிலையில் திலக் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு வந்த ராஜா, திலக்கின் மனைவி திவ்யாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து ராஜாவிடம் தட்டிக்கேட்ட திலக்கையும் அவர் தாக்கியுள்ளார். இதனையடுத்து ராஜா மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.