தனது இச்சைக்கு இணங்க மறுத்த பெண்ணுடையை குழந்தையை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ப்ரெஸ்னோ என்ற இடத்தில் வசித்து வருபவர் டெஸ்ரி மெனக்(18). இவர் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது பெண் குழந்தையுடன் சென்றார். அப்போது அங்கு வந்த மேக்ரோஸ் எசர்டி (23) என்பவர் அவரிடம் வரம்பு மீறியுள்ளார். பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு உல்லாசத்திற்கு அவரை அழைத்துள்ளார்.

அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த டெஸ்ரி, அங்கிருந்து வெளியேறி தனது நண்பருடன் காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் காரில் வந்த மேக்ரோஸ் டெஸ்ரியை பார்த்து துப்பாக்கியால் சுட்டார். இதில், டெஸ்ரியின் 10 மாத மகளின் தலையில் குண்டுகள் பாய்ந்தது.

இதையடுத்து, குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவளின் தலையிலிருந்து 2 துப்பாக்கி குண்டுகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தற்போது அபாய கட்டத்தை அவள் தாண்டி விட்டாள். இதையடுத்து போலீசார் மேக்ரோஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.