பல வருடங்களுக்கு முன்பு தன்னை அடித்த ஆசிரியரை ஒரு நபர் பழிவாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவில் சாங் என்ற மாணவர் 20 வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது வகுப்பில் அசந்து தூங்கி விட்டார். அதை பார்த்த கோபமடைந்த ஆங்கில ஆசிரியர் மாணவர்களின் முன்னிலையில் அவரை கடுமையாக அடித்துள்ளார். இதனால், சாங் மிகவும் அவமானம் அடைந்துள்ளார். ஆனால், ஆசிரியர் என்பதால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

பல வருடங்கள் கடந்த பின்பும் சாங்கின் மனதில் அந்த கோபம் அப்படியே இருந்துள்ளது. சமீபத்தில் அந்த ஆசிரியர் சாலையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வருவதை பார்த்த சாங் அவரை தடுத்து நிறுத்தி அவர் ‘அப்போது என்னை எப்படி அடித்தாய். இப்போது நான் அடிக்கிறேன்.. வாங்கிக்கொள்’ எனக்கூறி கன்னத்தில் பளார் பளார் என அடித்தார். இதைக்கண்டு அந்த ஆசிரியர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.

இந்த சம்பவம் அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆசிரியரை நடித்த அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.