ஹைதராபாத்தில் ஹோட்டலில் அறையெடுத்து தங்கிய காதலர்களுக்குள் தகராறு ஏற்படவே காதலன் காதலி கழுத்தை அறுத்த சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற வாலிபர் ஹைதராபாத்தின் தில்சுக் நகருக்கு வந்து பிருந்தாவன் எனும் ஹோட்டலில் ரூம் எடுத்துள்ளார். அதன் பின்னர் தனது காதலிக்கு போன் செய்து அவரை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த காதலிக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் கோபத்தில் அந்த வாலிபர் தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதனால் மிரண்டு போன பெண் கதவைத் திறந்து வாசலுக்கு வெளியே கத்திக் கொண்டே ஓடியுள்ளார். இதைப்பார்த்த ஹோட்டல் நிர்வாகம் போலிஸுக்கு தகவல் கொடுக்க போலிஸார் அங்கு வந்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன் பின்னர் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது அந்த வாலிபரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கவே அவரையும் மருத்துவமனையில் சேர்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.