தான் ஒரு ரகசிய உளவாளி எனக்கூறி பல பெண்களை திருமணம் செய்த பலே வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் எட்னிபர்க் எனும் பகுதியில் வசித்து வரும் பெண் மேரி டியூனர் தாம்சன் போலீசாரிடம் ஒரு புகார். அளித்தார். அதில், ஆன்லைன் மூலம் அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் ஆலன் ஜோர்டன் என்பவர் எனக்கு அறிமுகமாகி நட்புடன் பழகினார். எனக்கு ஏற்கனவே 9 மாத குழந்தை இருந்த நிலையில், என்னை திருமணம் செய்துகொள்ள அவர் விருப்பம் தெரிவித்தார்.

தொடக்கத்தில் மறுத்த நான் பின்பு ஒத்துக்கொண்டேன். அவரிடம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத குறை இருப்பதாக கூறினார். ஆனால், அவர் என்னுடன் இருந்த 6 மாதங்களில் நான் மீண்டும் கர்ப்பமானேன். ஆனாலும், நான் மகிழ்ச்சி அடைந்தேன். தான் ஒரு ரகசிய உளவாளி எனவும் பணி நிமித்தமாக நான் வெளியே பல இடங்களுக்கு செல்வேன் எனக் கூறியதால் அவரை பற்றி நான் எதுவும் கேட்கவில்லை.
ஆனால், அவர் ஏற்கனவே 6 பெண்களை திருமணம் செய்துள்ளார் என்பதும், அவர்கள் மூலம் 13 குழந்தைகள் இருப்பதும் சமீபத்தில் எனக்கு தெரியவந்தது. என்னிடம் கூறியது போலவே அனைத்து பெண்களிடமும் கூறி அவர்களை ஏமாற்றியுள்ளார்.

இந்த உண்மை எனக்கு தெரிந்துவிட்டதால் என் மகனை கொலை செய்யவும் முயன்றார். எனவே, அவருக்கு தெரியாமல் நான் ஒளிந்து வாழ்ந்து வருகிறேன் என போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, ஜோர்டனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு நீதிபதி 5 வருட சிறை தண்டனை அளித்தார்.