நான் ஈரமுள்ள களிமண் : ‘மாநகரம் ‘ வில்லன் நடிகர் சதிஷ்

01:54 மணி

நான் ஈரமுள்ள களிமண் : ‘மாநகரம் ‘ வில்லன் நடிகர் சதிஷ்

அண்மையில் வெளியாகியுள்ள ‘மாநகரம்’ படத்தைப் பார்த்தவர்களுக்கு நடிகர் சதிஷின் முகம் நினைவில் இருக்கும்.

இதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் பார்க்கிற இடங்களில் தேடிவந்து பாராட்டும் அளவுக்கு அவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது.

அவரிடம் தன் முன் கதையைக் கூறக் கேட்ட போது, மளமளவென பேச ஆரம்பித்தார்.

“எனக்குச் சொந்த ஊர் சென்னைதான். பள்ளி, கல்லூரி எல்லாமே இங்குதான் .பி.பி.ஏ முடித்தேன். எனக்குச் சினிமாவில் ஆர்வம் இருந்தது..

நான் முதலில் அறிமுகமான படம் ‘பட்டியல்’ .அதில் விஷ்ணுவர்தன் சார்தான் என்னை அறிமுகம் செய்தார். முதல் படத்திலேயே ஆர்யா, பரத்துடன் நடிக்கும் வாய்ப்பு .தினா என்கிற பாத்திரத்தில் நடித்தேன். அதன்பிறகு ‘சிவப்பதிகாரம்’, ‘பீமா’ ,’ஆரம்பம்’ போன்று சில படங்களில் நடித்தேன் .பிறகு இடைவெளி விழுந்தது. அடையாளம் தெரிய முடியாத அளவுக்கு.சிறுசிறு வேடங்களிலும் நடிக்க முடியாது . சும்மாவும் இருக்க முடியாது. காலை 9 மணியிலிருந்து  6 மணி வரைக்கும்வேலை நமக்குச் சரிப்பட்டு வராது. அதனால் போட்டோகிராபி கற்றுக் கொண்டேன். ஜோஷ்வா வில்லியம்ஸ் என்பவரிடம் உதவியாளராகி போட்டோகிராபியைக் கற்றுக் கொண்டேன். அது எனக்கு பொருளாதார ரீதியாக உதவியது.

இடையில் இடைவெளியில் மனம் சோர்வு அடையும் நிலை. எனவே வளைகுடா நாடு பக்கம் போனேன். அங்கே மஸ்கட்டில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன் ஆனாலும் சினிமா ஆர்வம் விடவில்லை.  அங்கு போனபோது ‘பட்டியல்’ படம் பார்த்து அடையாளம் கண்டு பேசியதும் எனக்கு நாம் போகும் இடம் சினிமாதான். என்று உணரவைத்தது. இனி சினிமாதான்என்  நினைத்தேன்.திரும்பி வந்து விட்டேன்.
இடையில் குறும்பட முயற்சிகள்.’சமர்ப்பணம்’ போன்ற சில குறும்படங்களில் இயக்கி நடித்தேன்.
.
இப்போது ‘மாநகரம்’ எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. இடையில் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இடைவெளியில் எனக்குப் பெரிதும் பக்க பலமாக ஊக்கமாக இருந்தது என் தம்பிதான் உனக்குப் பிடித்ததைப் பார் நான் குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறேன் என்று என் தம்பிதான் எனக்கான பொறுப்பையும் சுமந்து வருகிறான். அந்தக் குணமே  எனக்குள் ஜெயிக்க வேண்டும் என்கிற ஊக்கத்தைக்   கொடுத்து இருக்கிறது.

‘மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் அனைவருடனும் நட்புடன் பழகுபவர். படப்பிடிப்பு அனுபவம் குடும்பத்துடன் பழகிய உணர்வைத் தந்தது. சந்தீப், ஸ்ரீ, ரெஜினா, முனிஷ்காந்த் என எல்லாருமே நட்புடன்  பழகினார்கள்.   புதிய வாய்ப்புகள் வருகின்றன. பார்த்துதான் தேர்வு செய்ய வேண்டும் .

.நான் ஈரமுள்ள களிமண் என்னை எப்படி வேண்டுமானாலும் இயக்குநர் உருவாக்கலாம்.   நான் என்றும் இயக்குநரின் நடிகன்தான்.  நான் என்றும் இயக்குநரின் கைப்பாவையாகவே இருக்க விரும்புகிறேன். சினிமாவில் முதலில் வில்லனாக ஒரு ரவுண்ட் வரவேண்டும். இதுவே என் இப்போதைய இலக்கு”

பேச்சில் நம்பிக்கை தெறிக்கப் பேசுகிறார் சதிஷ்

(Visited 43 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com