இயக்குநர் மணிரத்னம் எதிர்பார்க்கும் சோலோ படம்

பொதுவா மணிரத்தினம் படங்கள் தான் ரசிகர்கள் மத்தியில ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஆனால் மணிரத்னம் ஒரு படத்தின் ரீலீசுக்காக காத்திருக்கிறார். அப்படி என்ன படம் ? இவரிடம் பணியாற்றிய பிஜோய் நம்பியாரின் இயக்கத்தில் ஓகே கண்மணி புகழ் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகவுள்ள படம் தான் சோலோ. அது சரி சிஷ்யனின் வெற்றி மீது குருவிற்கு ஆர்வம் இருக்கத்தானே செய்யும்.

சோலோ, பூமி, நீர், நெருப்பு, ஆகாயம் என்ற நான்கு கதைகளின் சாரத்தோடு புராண பின்னியைக் கொண்ட படம் என்று பேசப்படுகிறது. இதன் டீசரை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரன் ஜோஹர் வெளியிட்டார். செப்டம்பரில் தமிழி மற்றும் மலையாளத்தில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் ஆர்தி வெங்கடேஷ், தன்சிகா, டினோ மோரே, நேஹா ஷர்மா மற்றும் ஸ்ரீதி ஹரிஹரன் நடித்துள்ளனர்.