மகனை காப்பாற்ற அவசர உதவி கேட்ட சுஹாசினி! என்ன ஆச்சு?

01:27 மணி

பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களின் ஒரே மகன் இத்தாலியில் பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய மகனின் பணம், டெபிட், கிரெடிட் கார்ட் உள்பட முக்கிய பொருட்கள் திருட்டு போய்விட்டதாம்

இதுகுறித்த தகவல் அறிந்ததும் பதட்டமான நடிகை சுஹாசினி உடனே தனது டுவிட்டரில் இத்தாலியில் உள்ள வெனிஸ் சதுக்கத்தில் யாராவது இருந்தால் தயவுசெய்து என மகனுக்கு உதவுங்கள் என்று டுவிட்டரில் பதிவு செய்தார். இந்த டுவீட்டை பார்த்த இத்தாலி தமிழர்கள் நந்தனுக்கு உதவி செய்துள்ளனர்.

இதற்கு நன்றி கூறிய சுஹாசினி, தன்னுடைய மகன் பாதுகாப்பாக இருப்பதாக இன்னொரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். மணிரத்னத்தின் ஒரே மகனிடம் திருட்டு நடந்துள்ளது குறித்து இத்தாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393