காற்று வெளியிடை படைத்தை அடுத்து மணிரத்னம் அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களம் இறங்குகிறார். வழக்கம்போல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் சேர்ந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இப்படத்தின் முதல் பேஸ்டர் இன்று வெளியானது.