செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 26

நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்க விரும்புவது யார் தெரியுமா? மஞ்சிமா மோகன்

01:01 மணி

நடிகைகளை ஆடையில்லாமல் திரையில் பார்ப்பதை எந்த ஒரு ரசிகரும் விரும்புவதில்லை என்று பிரபல நடிகை மஞ்சிமா மோகன் கேள்வி ஒன்றுக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ளார்

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் நாயகி மஞ்சிமா மோகனிடம் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ஆபாச கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மஞ்சிமா மோகன், ”நடிகைகளை ஆடை இல்லாமல் பார்க்கத்தான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள் என்று யார் கூறியது? இந்த கருத்து முற்றிலும் தவறு. ரசிகர்கள் எப்போதுமே நல்ல தரமான திரைப்படங்களை பார்க்கவே திரையரங்குகளுக்கு வருகின்றனர். நடிகைகளின் ஆடைக்குறைப்பையோ அல்லது நடிகையின் நிர்வாணத்தை பார்க்கவோ அல்ல” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஷால், தமன்னா நடித்த ‘கத்திச்சண்டை’ இயக்குனர் சுராஜ், ‘நடிகைகளை கவர்ச்சி உடையில் பார்த்து ரசிக்கவே பணம் கொடுத்து ரசிகன் தியேட்டருக்கு வருவதாக கூறியிருந்தார். மஞ்சிமாவின் இந்த பதில் சுராஜூக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 47 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393