வீடு இல்லாத ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியர்….

கேரளாவில் வீடு இல்லாமல் பழைய ரயில் பெட்டிகளில் தங்கியிருந்த ஏழை சிறுமிகளுக்கு நடிகை மஞ்சுவாரியர் வீடு அளித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே, நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர் மஞ்சு வாரியர். அதன் பின் அவருக்கும் திலீப்பிற்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். தற்போது தீபக், நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபேடு என்ற இடத்தில், ஒரு பள்ளியில் படிக்கும் அர்ச்சனா மற்றும் ஆதிரா என்ற இரு சிறுமிகள், வறுமை காரணமாக தங்குவதற்கு வீடில்லாமல், ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய ரயில் பெட்டிகளில் பெற்றோருடன் தங்கி பள்ளிக்கு சென்று வந்தனர்.

இதுபற்றி கேள்விப்பட்ட மஞ்சு வாரியர், வறுமையிலும் பள்ளிக்கு சென்று படிக்கும் சிறுமிகளுக்கு உதவ முடிவெடுத்தார். எனவே, தன்னுடைய சொந்த செலவில் 5 செண்ட் நிலம் வாங்கி அதில் அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். மேலும் தன்னுடையை வேலைகளை தள்ளி வைத்து விட்டு சமீபத்தில் அந்த வீட்டின் புதுமனை புகுவிழாவிலும் அவர் கலந்து கொண்டு அந்த இரு சிறுமிகளின் குடும்பத்தினரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளார்.

மஞ்சுவாரியரின் இரக்க குணம் மலையாள நடிகர், நடிகைகள் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.