விமல் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி மற்றும் பிரபு, சாந்தினி தமிழரசன், சரண்யா பொன்வண்ணன், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள மன்னா் வகையறா படம் நேற்று வெளியாகியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜூலியும் இதில் நடித்துள்ளார் என்பது தான். இந்த படத்தை பார்த்த ரசிக பெருமக்கள் இதை வைத்து ஜூலியை கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு ஜூலிக்கு சினிமா வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது. உத்தமி என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். நேற்று வெளியாகியுள்ள மன்னா் வகையறா படத்தில் ஜூலி நடித்துள்ளார் என்றதும் ரசிகா்கள் ஆவலுடன் படத்தை கவனித்து வந்தார்கள். ஜூலி எப்போது வருவார் என்று படம் ஆரம்பம் முதல் இறுததி வரை காத்திருந்து கவனித்தனா். படத்தின் கடைசியில் இயக்குநர் ரசிகா்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் ஜூலிக்கு காட்சியை வைத்திருந்தார். இதனை பார்த்த ரசிக கோடிகள் இந்த படத்தில் ஜூலியை நடிக்க வைக்கவில்லை என்றும், ஜூலியை வைத்து கலாய்த்துள்ளார் என்று கூறுகின்றனா்.

வலைத்தளத்தில் நெட்டிசன்கள் இந்த அவமானம் உனக்கு தேவையா? என ஜூலியை மீண்டும் வைத்து கழுவி கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.