செப்டம்பர் அல்ல அக்டோபர்!– மஞ்சு மனோஜ்

மஞ்சு மனோஜ் குமார் நடித்து, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் செப்டம்பர் மாதம் வெளியாகயிருந்த, ‘ஒக்கடு மிகிலடு’ திரைப்படத்தின் திரை வெளியீடு, பிந்தைய தயாரிப்பு வேலைகளின் நிமித்தம் அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

‘ஒக்கடு மிகிலடு’ 1990 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈழம் தமிழ் மக்களின் படுகொலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, அஜய் நுதாக்கி இயக்கியுள்ளார். இதன் காரணமாக மிகுந்த எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தில் 1990களில் சிலோனில் நிகந்தவைகளைத் தத்ரூபமாகக் காட்ட முயற்சி செய்துள்ளனர்.

மனோஜ் இதில் இலங்கையின்1990 ஆம் ஆண்டின் புரட்சி தலைவராகவும், நிகழ்கால மாணவர் சங்க தலைவராகவும் நடிக்கிறார், இதற்காக இவர் தனது எடையில் 20 கிலோ எடை கூட்டியுள்ளார்.

இதைப் பற்றி கூறுகையில், “இலங்கை தலைவரின் காதாப்பாத்திரத்திற்காக நான் அதிக எடையுடன் தோன்றுவது அவசியமாக இருந்தது. இதனால் எனது எடையில் 20 கிலோ ஏற்றிகொண்டேன். இலங்கை புரட்சி தலைவரின் பட காட்சிகளை எடுத்து முடித்த விரைவில் ‘குண்டுரொடு’ என்ற மற்றுமொரு படத்தில் நடிக்கத் தொடங்கினேன். அதற்கு 10 கிலோ குறைக்க வேண்டியிருந்தது, பிறகு மாணவர் சங்க தலைவராக நடிக்க வேண்டிய பட காட்சிகளில் நடித்தேன்.” என்றார்.

English:

Keyword:

2.