பத்து மாதங்களில் முறிந்துபோன ஆச்சியின் திருமண வாழ்க்கை

08:10 காலை

தமிழ் ரசிகர்களலால் ஆச்சி என அன்போடு அழைக்கப்பட்டவர் மனோரமா, தனது திறனை வெளிப்படுத்தி திரையுலகில் சாதனை படைத்தவர். இவர் 1500-க்கும்  மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். மேலும் பத்ம ஸ்ரீ விருது மற்றும்  கலைமாமணி  விருதுகள்  என பல விருதுகள் பெற்றுள்ளார். இப்படி சினிமா துறையில் பல உயரங்களை எட்டிய ஆச்சி அவர்களின் திருமண வாழ்க்கை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தாயுடன் வாழ்ந்து வந்த மனோரமா நாடகத்தில் நடிக்கும் கொண்டிருக்கும் போதே ராமநாதன் என்ற சக நடிகரை எதிர்ப்புக:ளை மீறி திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை 10 மாதங்களே இருந்தது. காரணம் ராம நாதனின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டார் மனோரமா.

ராமநாதன் விருப்பட்டு தன்னை திருமணம் செய்யவில்லை என்பதும், தன் நண்பர்களின் விட்ட சவாலை நிறைவேற்றவே திருமணம் செய்ததும் மனோரமாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை விட்டு விலகினார். அந்த சமயம் அவ்ர் கர்ப்பவதியாக இருந்தது இருந்தார்.

பிறகு சினிமா என்று தன் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்தார். மனோரமா சின்னதம்பி படத்தில் நடந்து கொண்டிருந்த போது ராமநாதன் இறந்தார். அவரது உடலுக்கு மகன் என்ற வகையில் பூபதி  இறுதி சடங்கை முடித்து விட்டு திரும்பினார்.

மனோரமா பிறந்த சமூக வழக்கப்படி பூவும் போட்டும் பொட்டும் இல்லாமல் வாழ வலியுறுத்திய போது மனோரமா மறுத்து விட்டார். என்னை விட்டு எப்போது சென்றோரோ அப்போதே என் கணவர் இறந்து விட்டார் என்று என்று கூறி அதனை ஏற்க மறுத்தார்.

The following two tabs change content below.
மோகன ப்ரியா
இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com