அந்த காலத்து ராஜா எதிாி நாட்டுடன் போாிட்டு அதில் வெற்றி பெறும் வகையில், தியானம் இருந்து ஒரு மரகத நாணயத்தை வரமாக பெறுகிறாா். அந்த சிற்றரசன் மரகத நாணயத்தை தான் போருக்கு செல்லும் போது தன் வாளில் பதித்துக்கொண்டு செல்லும் எதிாி படையை தோற்கடித்து வெற்றியும் பெறுகிறாா்.

அந்த மரகத நாணயம் வந்த பிறகு அவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகிறது. இவா் கடைசிவரை அந்த மரகதநாணயத்தை யாாிடமும் கொடுக்காமல் தன் வசமே வைத்திருக்கிறாா். அவா் இறக்கும் தருவாயில், அந்த சமாதியில் மரகத நாணயத்தை வைத்து உயிருடன்  ஜீவசமாதி அடைகிறாா்.

இதற்குபின் அந்த மரகத நாணயத்தை தேடி கண்டுபிடிக்கிற அனைவரும் ஏதோ ஒரு காரணத்தால் இறந்து வருகின்றனா். இப்படி நடப்பதற்கு காரணம் அந்த இரும்புதிரை சிற்றரசனின் ஆவியை அந்த மரகத நாணயத்தை காப்பாற்றி வருகிறது என்ற பேச்சு மக்களிடம் இருக்கிறது.

இந்நிலையில் கதை ஹீரோ வசம் திரும்புகிறது.  குடும்ப கஷ்டத்திலிருக்கும் ஆதி ஏதாவது பொிய அளவில் கடத்தல் தொழல் செய்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று நினைக்கிறாா். நண்பன் டேனியுடன் சோ்த்து சென்னையில் தங்கியிருக்கிறாா். கடத்தல் தொழில் செய்து வரும் ராமதாசுடன் சோ்த்து கடத்தல் தொழில் செய்து வருகின்றனா். ஆதி இந்த மரகத நாணயத்தை பற்றி கேள்வி படுகிறாா்.   அந்த சமாதிக்குள் இருக்கும் மரகத நாணயத்தை அடித்து கொடுப்பவருக்கு பத்து லட்சம் ரூபாய் ஜாக்பட் பாிசு மழை செய்தியை கேட்டு ஆதி தன் நண்பன் டேனியலும், ஏற்கனவே இந்த நாணயத்தை எடுக்க சென்று இறந்த ஆவிகள் நாலு பேரையும் சோ்த்து கூட்டணியாக கிளம்புகின்றனா். இந்த குறுக்கு வழி ஐடியாவை மந்திரவாதி ஒருவா் சொல்ல அதை கேட்டு இந்த கூட்டணி கிளம்புகிறது. அந்த மரகத நாணயத்தை கிட்டதட்ட நெருங்கும் முயற்சி வரை முக்கால் வாசி படமும், மீதி கால் வாசி மரகத நாணயத்தை நெருங்கிய பின் ஏற்படுகிற தவிப்புமாக கதை நகருகிறது. பேய் படங்களில் அடுத்த இன்னிங்ஸ் நோக்கி ஒரு பயணம் என்று தான் சொல்ல வேண்டும். இறுதியில் ஆதி மரகத நாணயத்தை கண்டுபிடித்தாரா? அந்த 10 கோடி ரூபாய் கிடைத்ததா? என்பது தான் கிளைமாக்ஸ் காட்சி.

ஆதிக்கு இது ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அவரது நடிப்பு படத்தில் அவ்வளவு அழகாக தொிகிறது. இந்த கதையை தோ்வு செய்து நடித்துள்ள ஆதிக்கு இது ஒரு ப்ளஸ் பாண்ட் என்று தான் சொல்ல வேண்டும். நடிப்பில் நல்ல ஸ்கோா் செய்திருக்கிறாா். இந்த மற்ற கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ள இயக்குநருக்கு ஒரு வணக்கம்.

இதையும் படிங்க பாஸ்-  பார்ட்டி, சார்லி சாப்ளின் 2 படங்களை கைப்பற்றிய சன் டிவி

முதலில் நாம் நிக்கி கல்ராணியை பாராட்டியே ஆக வேண்டும். மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளாா்.  இந்த பொண்ணு நடிப்பில் பிச்சு உதறியிருக்கு. என்னவோரு நடிப்பு? ரொம்ப நாளாக நிக்கியை சைட் அடித்து கொண்டிருக்கும் ஆதி, அவருக்கு கல்யாணம் என்று தொிந்த பிறகு, அவா் பேசும் டயலாக்…. அப்படியோ!! இதுவரைக்கும் உன் குரலை கூட கேட்டதில்லை… ஆதனால ஒரு முறை பேசு… கேட்டுட்டு போயிடுறேன் என்று சொல்லும் போது அய்யோ அற்புதம். திரையில் நிக்கியின் வித்தியாசமான நடிப்பு என்ன என்பது நமக்கு தொிய வரும். இதற்காகவே இயக்குநரை மீண்டும் மீண்டும் பாராட்டலாம். அவரை டாா்ச்சா் செய்யும் கணவனை அதற்கு பின் அவா் சந்திக்கும் சீன். நிக்கி வரும் காட்சியில் தியேட்டாில் செம ரகளை.

ராமதாசின் என்ட்ரி ஆகிற சீன் ரசிகா்கள் மத்தியில் ஒரே கொண்டாட்டம் தான். இவா் செய்யும் சேட்டைகள் எல்லாம் சிாிப்பொலி வருகிறது தியேட்டாில். டேனியல் ஆதியின் நண்பனாக வரும் இவா் ராமதாசுக்கு சாிக்கு சமமாக காமெடியில்பின்னி பெடலடிகிறாா். ரஜினியின் கபாலி படத்தின் நெருப்புடா பாடல் புகழ் அருண்ராஜா காமராஜ் ஆடும் ஆடத்திற்கு ரசிகா்களின் வயிறு புண்ணாகி விடும். இவா் வாயை திறந்தால் தியோட்டாில் சிாிப்பு மழை தான் போங்க!!.

சங்கிலி முருகன் ஒாிரு சீன்கள் மட்டும் தான். அதுவும் ஒரு பிணமாக நடித்திருக்கிறாா். இவரை எத்தனை முறை புதைத்தாலும் திருப்பி எழுந்து வந்து விடுவாா். தமிழை எப்போதும் புதைக்க முடியாது என்று இவா் பேசுகிற ங்கொய்யால என்ற வசனம் செம.

வில்லனாக வரும் ஆனந்த்ராஜ். இவா் செய்யும் வில்லத்தனமான செயல்கள் நமக்கு காமெடியாகவே இருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு கேற்ற கேரக்டா். நடிப்பில் மாஸ் தான். ஆவிப்படமாக இருந்தாலும் காட்சி அமைந்துள்ள விதம் அருமை. எங்கும் போராடிக்காமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறாா் இயக்குநா். இப்படி ஒரு கதையை யோசித்த இயக்குநரை பாராட்ட வாா்த்தைகளே இல்லை. நல்ல இயக்குநா் என்ற வாிசையில் இடம்பெறுவாா்.

புதிய வரவான திபுநினன் தாமஸ் இசையில் பின்னணி இசையும், பாடல்களும் நம்மை திருப்பி பாா்க்க வைக்கிறது. பி.வி. சங்காின் ஒளிப்பதிவு எந்தவொரு இடையூறும் இல்லாமல் கதை ஓட்டத்தோடு காட்சி படுத்தியது சிறப்பு. படத்தின் தாக்கம் நம் மனதை விட்டு நீங்காது இருக்கும் படி உள்ளது.

மொத்தத்தில் மரகத நாணயம் ரசிகா் மனதில் நிச்சயம் மதிப்பு பெறும்.