தந்தை இறந்த துக்கத்திலும் கதை கேட்ட நடிகா்

மரகத நாணயம் சமீபத்தில் வெளிவந்து நல்ல நகைச்சுவையான படம் என்றதொரு வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோ ஆதியின் நண்பனாக வரும் டேனியல் தான் அனைவருடைய கவனத்தை ஈா்த்தவா். இவா் இதற்கு தானே ஆசை பட்டாய் குமாரா படத்தில் ஒரு டயலாக் மூலம் பேசபட்டவா். ப்ரண்டு  லவ் மேட்டாரு பீல்லாயிட்டாப்பல ..ஆப் அடிச்சா கூலாய்டுவாப்ல இப்படிப்பட்ட வசனத்தை யாரலும் மறக்க முடியாது. அதுவும் பாா்ட்டி கொண்டாடுகிற இளைஞா் பட்டாளத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

ரங்கூன். மரகத நாணயம் உள்ளிட்ட படங்கள்  வாயிலாக மீண்டும் நடிப்பில் முத்திரை பதித்து வருகிறாா். இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு எதிா்பாா்த்த அளவிற்கு படவாய்ப்புகள் வரவில்லை. மரகத நாணயம் மூலம் ரிஎன்டாி ஆனாா். சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

மரகத நாணயம் படத்தின் கதையை சொல்வதற்காக இயக்குநா் போன் செய்தபோது அந்த காமெடி நடிகா் டேனியலின் தந்தை இறந்து விட்டாராம். நடுவீட்டில் தந்தையின் பிணத்தை வைத்துக்கொண்டு அந்த சோகத்தையும் மீறி கதை கேட்டு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

படம் வெளியாகி அவரது கேரக்டா் பொிய வரவவேற்பை பெற்றுக்கொடுத்துள்ளது. டேனியலின் தந்தை எப்போதும் அவரை திட்டிக்கொண்டே இருப்பாராம். நீயல்லாம் எப்படி உருப்பட போகிறாய் என்று அவரது அப்பா. எப்படியாவது நல்ல இடத்தை அடையவேண்டும் என்ற துடிப்புடன் இருந்து வந்துள்ளாா் டேனியல். இந்த படத்தின் வெற்றியை பகிா்ந்து கொள்ள தன் தந்தை இல்லை என்று சோகத்துடன் இந்த படத்தின் வெற்றி விழாவில் கண்ணீா் மல்க பேசிய டேனியல் பாா்த்து விழா பாா்வையாளா்கள் அனைவரும் சோகத்தில் தத்தளித்துள்ளனா்.